School Boy Suicide Attempt: ரேகிங் கொடுமையால் பயங்கரம்; ஆறாம் வகுப்பு மாணவர் தற்கொலை முயற்சி.!

பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள், தன்னை ரேகிங் செய்த காரணத்தால் சிறுவன் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவாம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

School Boy Suicide Attempt: ரேகிங் கொடுமையால் பயங்கரம்; ஆறாம் வகுப்பு மாணவர் தற்கொலை முயற்சி.!
Raging on 6th Class Student (Photo Credit: @BigtvTelugu X)

டிசம்பர் 08, மெகபூபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெகபூபாத் மாவட்டம், குடுர் ஆஸ்ரமம் ஆண்கள் பள்ளியில், ஆறாம் வகுப்பில் ரித்விக் என்ற மாணவர் பயின்று வருகிறார். இவரை பத்தாம் வகுப்பு மாணவர்கள் ரேகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்துபோன மாணவர் ரித்விக், தான் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை காப்பாற்றிய மாணவர்கள், விடுதி நிர்வாகத்தின் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 70-Year-Old Lady Killed: மதுபானம் வாங்க பணம் தராத மூதாட்டி அடித்துக்கொலை; இரத்த வெள்ளத்தில் மூழ்கி பறிபோன உயிர்.! 

ரேகிங் கொடுமை காரணமாக மாணவர் தற்கொலை முயற்சி:

தற்கொலை தொடர்பான எண்ணத்தை தடுக்க, குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து புகார் அளிக்க அரசின் 1098 (Suicide Helpline and Childline Number 1098 ) என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும். புகார் அள்ளிப்பவரின் ரகசியம் காக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவி செய்யப்படும்.

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).