Teacher Sexually Assaulted Boy: 10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டல்.. ஆசிரியை மீது வழக்குப்பதிவு..!

பெங்களூருவில் ஆசிரியை ஒருவர் 10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Boy Abuse (Photo Credit: Pixabay)

ஜனவரி 30, பெங்களூரு (Karnataka News): மகாராஷ்டிர மாநிலம், தானே (Thane) நகரைச் சேர்ந்த 10 வயது சிறுவன், பெங்களூருவில் (Bengaluru) உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இப்பள்ளியில், பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவர், சிறுவனை விருந்தினர் அறைக்கு அழைத்து சென்று, பலமுறை பாலியல் வன்கொடுமை (Sexual Abuse) செய்ததாகக் கூறப்படுகிறது.  Road Accident Video: ஓடும் பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்து பெண் பலி.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் பகீர் வீடியோ.!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை:

மேலும், இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால், உன்னுடைய பெற்றோரை கொன்று விடுவதாக சிறுவனை அந்த ஆசிரியை மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனமுடைந்த அச்சிறுவன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தானே பகுதியில் வசிக்கும் பெற்றோர், அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆசிரியை மீது வழக்குப்பதிவு:

புகாரின் பேரில், சம்மந்தப்பட்ட ஆசிரியை மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் போக்சோ சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்கள் உதவி எண்கள்:

மிலாப்: 9990588768; அகில இந்திய ஆண்கள் உதவி எண்: 9911666498; ஆண்கள் நல அறக்கட்டளை: 8882498498; வாஸ்தவ் அறக்கட்டளை: 8424026498.

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement