Youth Brutally Murdered: நடுரோட்டில் ஓடஓட விரட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ லீக்.!
ஹைதராபாத் பகுதியில் இளைஞர் ஒருவரை இரவு வேளையில் கும்பல் ஒன்று ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஜூன் 14, ஹைதராபாத் (Hyderabad News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் (Youth Brutally murdered in Hyderabad), பலாப்பூர், ராயல் காலனி பகுதியில் நேற்று இரவு சமீர் என்ற 28 வயது இளைஞர் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அச்சமயம் அவரை சுற்றிவளைத்த மர்ம கும்பல், இளைஞரை கடுமையாக தாக்கி கத்தியால் குத்தி இருக்கிறது. அவர்களின் பிடியில் இருந்து இளைஞர் தப்பிச்செல்ல முயன்றபோதும், கும்பல் இளைஞரை சுற்றிவளைத்து கத்தியால் குத்தியது. உடலில் இருந்து இரத்தம் வெளியேறி கீழே விழுந்து எழுந்த இளைஞரை, கும்பலை சேர்ந்த நபர் கடுமையாக கட்டையால் தாக்கினார். இதனால் நிலைகுலைந்து போன இளைஞர், மயங்கி அங்கேயே விழுந்தார். ENG Vs OMA: 47 ரன்களில்சுருண்டுபோன ஓமன் அணி; 3.1 ஓவர் முடிவில் ஆட்டத்தை முடித்த இங்கிலாந்து.. அசத்தல் வெற்றி.!
கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை:
அப்பகுதி மக்களில் ஒருசிலர் இளைஞரை காப்பாற்ற முயற்சி செய்தும் பலனில்லை. இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஏற்கனவே அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் காவல் துறையினர் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், இளைஞர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்த கும்பல் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவம் நடக்கும்போது, அங்குள்ள கட்டிடம் ஒன்றின் மீது இருந்து இளைஞர் ஒருவர் பதிவு செய்த பதைபதைப்பு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)