போதையில் லிவிங் டுகெதர் பார்ட்னரை போட்டுத்தள்ளிய பெண்.. பதறவைக்கும் சம்பவம்.!

போதையில் இருந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்த லிவிங் டுகெதர் காதலன் போட்டுத்தள்ளப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

மே 09, டேராடூன் (Uttarakhand News): உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா சிங். இவரின் லிவிங் டுகெதர் காதலர் அஜய் ராவத். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தைத்தொடர்ந்து, தனியாக வீடு எடுத்து லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே, சம்பவத்தன்று இருவரும் மிதமிஞ்சிய போதையில் இருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராதிகா அஜயை கத்தியால் குத்தி இருக்கிறார். Chennai News: கம்பளைண்ட் கொடுத்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ரூமுக்கு அழைத்த காவலர்.. சென்னையில் அதிர்ச்சி.! 

சம்பவ இடத்திலேயே பலி:

இதில் நிலைகுலைந்துபோன அஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலை சம்பவத்தால் பதறிப்போன ராதிகா தற்போது தலைமறைவாகி இருக்கிறார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அஜய்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராதிகாவை தேடி வருகின்றனர். கடந்த ஓராண்டாக ஒன்றாக வசித்து வந்த ஜோடி நிச்சயம் மற்றும் திருமணத்துக்காக திட்டமிட்டு இருந்த நிலையில் இக்கொடூரம் அரங்கேறி இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement