Air Siren in Chandigarh: சண்டிகரில் சைரன் ஒலி.. மக்கள் கவனத்துடன் இருக்க இந்திய ராணுவம் எச்சரிக்கை.!
இந்திய நிலப்பரப்பை நோக்கி பாகிஸ்தான் மீண்டும் வான்வழி தாக்குதலை முன்னெடுத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சண்டிகரில் வான் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை ஒலியை பதிவு செய்துள்ளது.
மே 09, சண்டிகர் (Chandigarh News): ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்க இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் உருவாகியுள்ளது. பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து, இந்தியாவுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ளது உலக நாடுகளிடையே பயங்கரவாதத்துக்கு நாங்கள் வெளிப்படையான ஆதரவை வழங்குவேன் என்பதை உறுதி செய்துள்ளது. Operation Sindoor: எல்லையில் நீடிக்கும் பதற்றம்.. மாஸ் காட்டும் இந்தியா.. பாகிஸ்தான் தாக்குதல் வானிலேயே முறியடிப்பு.!
சத்தீஸ்கரில் சைரன் ஒலிப்பு:
இந்திய எல்லைப்புற நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை முன்னெடுக்கிறது. இந்தியா அதனை தனது இராணுவ வலிமை கொண்டு எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், சண்டிகரில் உள்ள வான் தடுப்பு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ராணுவத்திடம் இருந்து வான் தாக்குதலுக்கு வாய்ப்புள்ள சைரன் எச்சரிக்கை ஒலி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் உடனடியாக தங்களின் வீடுகளுக்கு சென்று மின் இணைப்புகளை அணைத்துவிட்டு, வீட்டின் ஜன்னல், கதவுகளை பூட்டி பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.