Kungumapoo: குங்குமப்பூ நன்மைகள்.. உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற பயன்கள்.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

உடலின் ஆற்றலை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றும் குங்குமப்பூ (Saffron Benefits in Tamil) நன்மைகள் குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள். இதுபோன்ற ஆரோக்கியம் தொடர்பான செய்திகளை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெற எங்களுடன் இணைந்திருங்கள்.

Kungumapoo (Photo Credit: PIxabay)

மே 07, சென்னை (Health News Tamil): உலகில் 'சிவப்பு தங்கம்' என போற்றப்படும் குங்குமப்பூ (Saffron Flower in Tamil), மதிப்புமிக்க மசாலா பொருள் ஆகும். இது குரோகஸ் சத்வஸ் என்ற மலரில் இருந்து பெறப்படுகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் குங்குமப்பூ (Kungumapoo Nanmaigal) குரோகஸ் பூக்களின் உலர்ந்த சூலகம் ஆகும். இந்த குங்குமப்பூ மத்திய தரைக்கடலில் இருந்து தோன்றியதாக ஆய்வுகள் கூறுகின்றன. குங்குமப்பூவில் ஏராளமான இரும்புசத்து நிறைந்து கிடக்கிறது. இது நோயெதிர்ப்பு சக்தியை சக்தியை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கும் - குழந்தையின் சிவந்த நிறத்துக்கும், குங்குமப்பூவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. GLEX 2025: இந்தியாவில் 250க்கும் மேற்பட்ட விண்வெளி தொடக்க நிறுவனங்கள்.. பிரதமர் மோடி பெருமிதம்..!

குங்குமப்பூ நன்மைகள்:

பாலில் குங்குமப்பூ சேர்த்து குடித்தால் குழந்தையின் நிறம் மாறும் என்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்படாத மக்களின் எண்ணம். இது திட்டமிடப்பட்டு பரப்பப்பட்ட பொய்யான தகவல் ஆகும். வாசனை பொருளான குங்குமபூ ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். இதனால் மனஅழுத்தம் குறையும். உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். குங்குமப்பூவை நீர் விட்டு இரவில் ஊறவைத்து, சிறிது வெண்ணெய் கலந்து அரைத்து உதட்டில் பூசி வர உதடு வறட்சி சரியாகும். குங்குமப்பூ சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கை உண்டாக்கும் என்பதால் கவனத்துடன் இருக்கவும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement