Ear Piercing Hole: தொங்கும் காது சரி செய்ய 1 நிமிஷம் போதும்.. உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

தொங்கும் காது மடல்களால் தோற்றத்தையும் கெடும். இது சில நேரங்களில் வலியையும் உண்டாக்கும். இதுபோன்ற பிரச்சனைகளை நீங்களும் அனுபவிக்கிறீர்கள் எனில் இந்த குறிப்புகள் உங்களுக்குதான்.

Stud (Photo Credit: Instagram)

ஜனவரி 30, சென்னை (Chennai News): டிரஸ்களுக்கு ஏற்ற பெரிய தோடுகள் அணிவது பெண்களுக்கு மிகப் பிடித்த ஒன்றாகும். இதனால அதிக எடையுள்ள தோடுகள் அடிக்கடி அணிவதால் சிலருக்கு காது வேகமாகவே தளர்ந்து விடுவிகிறது. பிறகு புதுப்புது டிசைன்களில் தோடு அணியமுடியாமலும் போகிறதும். மேலும் அது முகத்தில் அழகையும் கெடுத்து விடும். இதற்காக பலரும் ஸ்கின் டாக்டரை அணுகுவது, இவை மீண்டும் பழைய நிலை வர கிரீம்களையும் பயன்படுத்துவர். இதைவிடுத்து இயற்கை முறையில் வீட்டிலேயே இப்பிரச்சனையை சரிசெய்யலாம்.

பெரிய காது ஓட்டைகளை சிறியதாக்க:

1. கிண்ணத்தில் சோளா மாவு 1 ஸ்பூன், தேன் ½ ஸ்பூன், கற்றாளை ஜெல் 2 ஸ்பூன் ஆகியற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை காதுகளின் ஓட்டையில் முன்னும் பின்னும் சீராக தடவ வேண்டும். இரவு முவுவதும் அப்படியே விட்டு விட்டு காலை கழுவ வேண்டும். இதை தொடந்து தினமும் இரவு செய்து வந்தால், காதுகளின் ஓட்டை கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கும். இந்த மெத்தர்டை காதுகள் தலர்வாக ஆரம்பிக்கும் போதே செய்ய வேண்டும். பெரியதான பின் இதை செய்வதால் அந்த அளவிற்கு ரிசல்டை எதிர்பார்க்க இயலாது. Employment News: தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் தேவை.. மாதம் ₹25,000 சம்பளம்... இந்த வாய்ப்பை நழுவ விடாதீங்க..!

2. தூள் உப்பு 1/2 ஸ்பூன், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு ஸ்பூன் தேங்காய் எணணெய் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும் இதை விரலில் நன்கு தேய்து அப்படியே காதுகளின் ஓட்டைகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மசாஜ் செய்வது போல 2 நிமிடத்திற்கு தேய்க வேண்டும். இது ஒரு வாரத்தற்கு தொடர்ந்து செய்து வந்தால் காதுகளில் தளர்வுகள் சரியாகி இறுக்கமாக ஆரம்பிக்கும்.

காதுகளின் ஓட்டைகள் சையாக இருக்கும் போதே, அடிக்கடி தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இது காதுகளின் தசைகளை தளர்வாக்காமல் பாதுகாக்கும். மேலும் சிறிய தண்டு உள்ல தோடுகளை ரெகுலர் தோடுகளாகப் பயன்படுத்தலாம். பெரிய தோடுகள் அணிந்தால் அன்று இரவே எண்ணெய் மசாஜ் செய்து விட்டு சிறிய தண்டுள்ள தோடுகளை அணியலாம். இறுக்கமான் தோடுகள் அணிவதையும் தவிக்க வேண்டும். இது சுலபமாக காது தசைகளை தளர்வாக்கிவிடும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement