IPL Auction 2025 Live

Aval Kolukattai Recipe: சுவையான அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

அருமையான சுவையில், குழந்தைகளுக்கு பிடித்தமான அவல் கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Aval kolukattai (Photo Credit: YouTube)

ஜூன் 03, சென்னை (Kitchen Tips): அவலில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அவல் உடல் சூட்டை தனித்து, உடலுக்கு புத்துணர்வு தருகின்றது. மேலும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் இது பெரிதும் உதவுகிறது. அந்த வகையில், அவலை கொண்டு எப்படி சுவையான அவல் கொழுக்கட்டை (Aval Kolukattai) செய்வது என்பதனை இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

அவுல் - 1 கப்

வெல்லம் - அரை கப்

தேங்காய்த் துருவல் - 1 கப்

எள், நெய் - 1 கரண்டி

உப்பு - கால் கரண்டி. Israelis Banned From Entering Maldives: இஸ்ரேலியர்கள் மாலத்தீவில் நுழைய தடை; அதிபர் முகமது முயிசு அதிரடி அறிவிப்பு..!

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடேற்றி, அதில் ஒரு கப் அவலை போட்டு 2 நிமிடம் வறுத்து, பின் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, அதே கடாயில் வெல்லத்தை போட்டு, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, வடிகட்டி வைத்துள்ள வெல்லப்பாகை அதில் ஊற்றி கொதித்து வந்தவுடன், அவல் பவுடரை அதில் போட்டு மாவு திரண்டு வரும் வரை கிளறிவிட வேண்டும். பிறகு ஆற வைக்கவும்.

ஆறியவுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், எள்ளு, நெய், உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பிசைந்த மாவினை கொழுக்கட்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளவும். பிறகு, அடுப்பில் ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும்.

பின்னர், அதன்மேல் இட்லி தட்டை வைத்து துணி போட்டு, கொழுக்கட்டைகளை அதில் வைத்து மூடி சுமார் 5 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.

வெந்த பிறகு எடுத்து பரிமாறி அனைவரும் சாப்பிடவும். அவ்வளவுதான் சுவையான அவல் கொழுக்கட்டை ரெடி.