Sabarimalai Makara Jyothi 2025: "சாமியே சரணம் ஐயப்பா" - சபரிமலை மகரஜோதி சிறப்புகள் இதோ..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்து மகரவிளக்கு பூஜை துவங்கவுள்ளது.

Sabarimalai Makara Jyothi 2025 (Photo Credit: Team LatestLY

ஜனவரி 08, சபரிமலை (Festival News): கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலையில் (Sabarimalai) இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி துவங்கியது. இதனையடுத்து, மண்டல பூஜை காலத்தின் முக்கிய நிகழ்வாக, சபரிமலை ஐயப்பனுக்கு கடந்த டிசம்பர் 25ஆம் தேதி மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் 26ஆம் தேதி மணியோசையும் சரணகோஷங்களும் முழங்க ஐயப்பனுக்கு பிரதான மண்டல பூஜை நடந்தது. தங்க அங்கியில் ஜொலித்த ஐயப்ப தரிசனத்திற்குப் பின், டிசம்பர் 26ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்பட்டது. இதோடு, நவம்பர் 16 முதலான 41 நாள் மண்டல பூஜைக்காலம் நிறைவுற்றது. Arudra Darisanam 2025: நடராஜர் அருளை தரும் ஆருத்ரா தரிசனம்.. வரலாறு, தேதி மற்றும் மகா அபிஷேகம் குறித்த தகவல் இதோ..!

சபரிமலை மகரஜோதி:

இந்நிலையில், மூன்று நாள் இடைவெளிக்குப் பின் டிசம்பர் 30ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. 2025ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி மாலை, சபரிமலை ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜை (Sabarimalai Makara Jyothi) நடக்கிறது. மகரஜோதி தரிசனத்திற்குப்பின், ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் அரச கோல ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். ஜனவரி 20ஆம் தேதி பந்தள மகாராஜா குடும்பத்தினருக்கு மட்டுமான சிறப்பு பூஜையும், தரிசனமும் நடத்தப்பட்டு, அன்றிரவு கோயில் நடை அடைக்கப்படும். பின், சபரிமலை கோயிலின் சாவி, பந்தள மகாராஜா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அதோடு, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கால உற்சவம் நிறைவு பெறும். இந்த ஆண்டு மண்டல பூஜை துவங்கியது முதலே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்:

இதனால் மகரவிளக்கு பூஜையின் (Makaravilakku Puja) போது சாமி ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு பணிகளுக்காக 1500க்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவிற்கு பிறகு மகரவிளக்கு தரிசனத்திற்கான மைதானங்கள் சோதனை செய்யப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement