வானிலை: இரவு முழுவதும் கொட்டப்போகும் மழை.. 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

தமிழகத்தில் இன்று இரவு 10 மணிவரை 21 மாவட்டங்களில் மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tamilnadu Rains File Pic (Photo Credit : Youtube)

அக்டோபர் 06, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரமாக இருந்தது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய "சக்தி" தீவிர புயல், தெற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05:30 மணி அளவில் வலுகுறைந்து புயலாக அதே பகுதிகளில் நிலவியது. இது மேலும் தெற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கு-தென்மேற்கே சுமார் 940 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது மேலும் கிழக்கு-தென்கிழக்கே மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுகுறையக்கூடும்.

இன்றைய வானிலை (Today Weather):

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Gold Rate Today: 5 நாட்களில் 2,000 உயர்வு.. புதிய உச்சத்தில் தங்கம்.. ரூ.89,000க்கு விற்பனை.!

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, ராணிப்பேட்டை, சேலம், நீலகிரி, திருவள்ளூர், திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர், வேலூர் மற்றும் பாண்டிச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை (Chennai Weather):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement