Bigg Boss Tamil Season 8: 24 மணி நேரத்தில் முதல் எவிக்ஷன்.. முதல் ஆளாக வெளியேறிய பெண் போட்டியாளர்..!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முதல் முறையாக 24 மணி நேரத்திலேயே எவிக்ஷன் நடைபெற்றது.
அக்டோபர் 08, சென்னை (Cinema News): விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி நேற்று முன்தினம் (அக்டோபர் 06) மிக பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான 3-வது ப்ரோமோ நேற்று வெளியாகி இருக்கிறது. இதில், எந்த சீசனிலும் இல்லாத வகையில் நிகழ்ச்சி தொடங்கி 24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன் நடைபெற இருக்கிறது என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். Bigg Boss Tamil Season 8: ஆண்கள் Vs பெண்கள்.. வீட்டை விசு படம் போல பிரித்த பிக் பாஸ்; அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்.. இன்றைய ப்ரோமோ உள்ளே.!
எபிசோடின் 3-வது ப்ரோமோ வெளியாகி, அதில் யாரை வெளியேற்றம் செய்யலாம் என்று ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. அதில், சச்சனா நமிதாஸ் (Sachana Namidass) உணர்ச்சி வசப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகள் வெளியாகி பிக் பாஸ் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
முதல் நாளின் மூன்றாவது ப்ரோமோ: