Road Accident: கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து; 6 பேர் உடல் நசுங்கி பலி.., பதறவைக்கும் சிசிடிவி காட்சி உள்ளே..!

பெங்களூருவில் நெடுஞ்சாலையில் கார் மீது கண்டெய்னர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Container Truck Accident in Bengaluru (Photo Credit: @TOIBengaluru X)

டிசம்பர் 23, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து துமகூரு நெடுஞ்சாலையில் நெலமங்களா (Nelamangala) என்ற இடத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி பள்ளி வாகனம் மற்றும் கார் மீது மோதி (Lorry-Car Accident) விபத்துக்குள்ளானது. இதில் நிலைதடுமாறி கார் மீது லாரி கவிழ்ந்தது. காரில் இருந்த 5 பேரும், அருகில் பைக்கில் நின்று கொண்டு இருந்த ஒருவரும் என மொத்தம் 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து நெலமங்களா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  Assam Earthquake: அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளாக பதிவு.!

சிசிடிவி காட்சி இதோ:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement