Trending Video: செல்போனை பறித்த திருடன்.. ஸ்லிப்பர் ஷாட் கொடுத்த இளம்பெண்.!

இளம்பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டு காரில் தப்பிச் சென்ற இளைஞர்களில் ஒருவர் சிக்கிக்கொண்டதால், பொதுமக்கள் ஒன்றுகூடி அவரை வெளுத்தெடுத்தனர்.

Thief Caught by Public (Photo Credit: @ManojSh28986262 X)

ஏப்ரல் 20, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், பாபு பூர்வா காவல் எல்லைக்குட்பட்ட கிட்வாய் நகர் பகுதியில் கல்லூரி மாணவி சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த இருவர் கும்பல் பெண்ணின் செல்போனை பறித்து தப்பிச் சென்றது. பெண் குரலிட்டதால் அவர்களை பொதுமக்கள் துரத்த, இளைஞர்கள் காரில் தப்பிச்சென்ற போது அவர்களின் வாகனம் ஆட்டோ மீது மோதி விபத்தில் சிக்கியது. இதனால் இருவரையும் மக்கள் விரட்டிய நிலையில் ஒருவர் தப்பியோடினார். கையில் சிக்கிய மற்றொருவரை பொதுமக்கள் வெளுத்தெடுத்த நிலையில், பெண் அவரை செருப்பால் அடித்தார். அதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் வசம் இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். இந்த விஷயம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மகளின் மாமனாருடன் 4 வது முறை ஓட்டம் பிடித்த பெண்மணி.. கணவர் குமுறல்..! 

கையில் சிக்கிய திருடனை பொதுமக்கள் வெளுத்தெடுத்த காட்சிகள்:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement