Vijayakant: மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரர் - கேப்டன் விஜயகாந்தின் நினைவு நாளில் முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்.!

தூய அன்பிற்கும் சொந்தக்காரராக இருந்த மனிதரின் நினைவு நாளில் அவரை நினைவுகூருகிறேன் என முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

MK Stalin & Vijayakant (Photo Credit: @MKStalin X)

டிசம்பர் 28, தலைமை செயலகம் (Chennai News): தேமுதிக (DMDK) கட்சியின் முன்னாள் தலைவர், மக்களின் இதயத்தில் இடம்பெற்ற நாயகன், காண்போரின் பசியாற்றும் கர்ணன் விஜயகாந்த் (Vijayakant), கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 28 அன்று உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து ஓராண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், பல கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் நேரில் வந்து தங்களின் மரியாதை செய்தனர். இந்நிலையில், திமுக தலைவர் & தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், தனது எக்ஸ் (ட்விட்டர்) வலைப்பதிவில், "மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்!" என தெரிவித்துள்ளார். Anna University: அண்ணா பல்கலை., மாணவி பலாத்கார விவகாரம்; இன்று ஆளுநர் ஆர்.என் நேரில் ஆய்வு.! 

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பதிவு:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement