Chennai Rains: சென்னையில் கொட்டும் மழை.. வெப்பத்தை தணித்த மழையால் மக்கள் குஷி..!

சென்னையில் ஒரு சில பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

Chennai Rains (Photo Credit: @AneesAhmedK X)

ஏப்ரல் 16, சென்னை (Chennai News): சென்னையின் பல பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வளசரவாக்கம், ஆலந்தூர், மாதவரம், புழல், செங்குன்றம், மணலி, கொளத்தூர், நங்கநல்லூர், வடபழனி, அசோக்பில்லர், கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதுரவாயல், திருமுல்லைவாயல், முகப்பேர், அம்பத்தூர், திருவேற்காடு, ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 12 மணிநேரத்தில் காற்றின் வேகமானது மணிக்கு 41 கிமீ முதல் 61 கிமீ வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை: ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு..!

சென்னையில் திடீர் கனமழை:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement