Iruttukadai Halwa: இருட்டுக்கடை அல்வாவை ருசித்த முதல்வர்; மக்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி பயணம்.!
பாரம்பரியமிக்க இருட்டுக்கடை அல்வா கடைக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று மக்களுடன் மக்களாக அல்வா சாப்பிட்டு மகிழ்ந்தார்.
பிப்ரவரி 07, நெல்லையப்பர் கோவில் (Tirunelveli News): தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் (MK Stalin Tirunelveli Visit), திருநெல்வேலி (Tirunelveli) மாவட்டத்தில் கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு இருந்தார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி இருந்தார். நேற்று இரவு, நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக மாநகரில் உள்ள பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்று இருந்தார். அங்கு திடீரென முதல்வர் வந்தது பலருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அல்வா கடை குழுவினர் இடையே நலம் விசாரித்த முதல்வர், பொதுமக்களிடமும் பேசி அல்வாவை சாப்பிட்டு மகிழ்ந்தார். மேலும், எளிய மக்களுடன் எளியவனாக பழகுவது, தனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துவதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். Tiruppur Accident: 2 கல்லூரி மாணவர்களின் உயிருக்கு எமனான திருப்பூர் தனியார் பேருந்து.. ஓட்டுநர், நடத்துனர் கைது.!
இருட்டுக்கடை அல்வாவை சாப்பிட்டு மகிழ்ந்த முதல்வர்: