MS Dhoni The King Of Chepauk: அரங்கத்தை அதிரவிடும் தல தோனியின் என்ட்ரி - சி.எஸ்.கே பெண் ரசிகை வெறித்தன பேட்டி.!

ஒரு கிரிக்கெட்டரின் உற்சாகம் மைதானத்தில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பு தான். அந்த பெருமையை காலங்கள் தாண்டி இடி முழக்கம் போல தக்க வைத்துள்ளனர் தல தோனி.

MS Dhoni (Photo Credit: @IPL Twitter)

மே 25, சென்னை (Chennai): டாடா ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், 73வது போட்டியாக குஜராத் ஐட்டம்ஸ் அணியும் - மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. தகுதி பெறுவதற்காக இரண்டு அணிகளும் வெற்றியை அடைவதற்கு முனைப்புடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தாவது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், அந்த அணியின் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், தல தோனி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு முன்பு ஆட வரும் பலரையும் ரசிகர்கள் வெளிப்படையாக அவுட் ஆக சொல்லி கிரிக்கெட் மைதானங்களில் கூச்சலிட்டதும் நடந்தது. Swiggy-Zomato Troll Naveen-ul-Haq: மண்ணைக்கவ்விய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி; நவீனை வச்சி செய்யும் ஜுமாடோ, ஸ்விக்கி நிறுவனங்கள்.! 

M.S Dhoni Keeping | IPL 2023 (Photo Credit: Twitter)

இந்த விஷயம் குறித்து மறைமுகமாக ஜடேஜாவும் தனது பதிவு செய்திருந்தார். சென்னை அணியுடன் இறுதி போட்டியை ஆடப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள காரணத்தால், 2023 ஐ.பி.எல் சீசன் பெரும் ஆரவாரத்துடன் கலைக்கட்டியுள்ளது.

இந்த நிலையில், தற்போது சென்னை அணியின் ரசிகை ஒருவர், இறுதி போட்டியில் தோனியின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர் இரண்டு பந்துகள் அடித்தாலும், மூன்று பந்துகள் அடித்தாலும் நாங்கள் அதை மட்டுமே முக்கியமாக கவனிப்போம். அவரின் வருகை உறுதி செய்யப்பட்டால் கிரிக்கெட் மைதானமே அதிரும் அளவிற்கு ஒவ்வொருவரும் சந்தோஷப்படுவார்கள், ஆனந்த கண்ணீரில் நனைவர்கள்" என்று பேட்டியளித்து இருக்கிறார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement