Rohit Sharma Retirement: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு: அதிகாரபூர்வ அறிவிப்பு.!

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ஓய்வு (Rohit Sharma Retirement) அறிவிப்பு வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை தந்துள்ளது. இளம் தலைமுறைக்கு வழிவிடும் வகையில் ரோஹித் செயல்பட்டுள்ளார்.

Rohit Sharma Retirement (Photo Credit: Instagram)

மே 07, புதுடெல்லி (Sports News): இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன், ரசிகர்கள் ஹிட்மேன் என அழைக்கப்படுவர் ரோஹித் சர்மா (Rohit Sharma). இதுவரை இந்திய கிரிக்கெட் அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித், தனது தனித்துவமான பேட்டிங் திறன் காரணமாக ரசிகர்களால் பாராட்டப்பட்டார். 50 ஓவர்கள் கொண்ட உலகக்கோப்பை சாம்பியன்ஸ்ஷிப் தொடரில் சமீபத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி வெற்றி அடைந்து இருந்தது. SRH Vs DC: பந்துவீச்சில் புயலாக ஹைதராபாத்.. இறுதிக்கட்டத்தில் அணிக்கு கைகொடுத்த திரிஷ்டன், அஷுதோஷ்.! 

ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்பு (Rohit Sharma Retirement):

தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா விளையாடி வருகிறார். இந்நிலையில், ரோஹித் சர்மா தனது ஓய்வை அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து தான் விலகிக்கொள்வதாக ரோஹித் சர்மா அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. ரோஹித்தின் ஓய்வு ரசிகர்களால் எதிர்பார்க்காத ஒன்று எனினும், ஒருசில போட்டிகளில் அவர் பாமில் இல்லாமல் தடுமாறினார். இதனால் எதிர்கால தலைமுறைக்கு வழிவிடும்பொருட்டு தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

ஆனால், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பயணிப்பேன் எனவும் ரோஹித் தனது அறிவிப்பில் ஓடிஐ தொடர்பான அறிவிப்பை தெளிவுபடுத்தி இருக்கிறார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement