வானிலை: 26 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்தை சுற்றிலும் வெவ்வேறு இடங்களில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 21, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பொறுத்தவரையில், உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும் (உள் தமிழகத்தில் அநேக இடங்களிலும், தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும்) மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் மேட்டூரில் அதிகபட்சமாக 15 செமீ மழையும், திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் 12 செமீ மழையும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி பகுதியில் 10 செமீ மழையும் பெய்துள்ளது. எஞ்சிய கிருஷ்ணகிரி, கோவை, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, நாமக்கல், சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், நீலகிரி உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரூர் மாவட்டம் பரமத்தி வேலூரில் 35.5 டிகிரி செல்ஸியஸ் வெப்பமும், ஈரோடு மாவட்டத்தில் 17.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
டானா புயல் (Dana Cyclone):
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று (20-10-2024) வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை (21-10-2024) 05:30 மணி அளவில் மத்தயகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 22-ஆம் தேதி காலை, மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 23-ஆம் தேது வாக்கில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, இது வடமேற்கு இசையில் நகர்ந்து, 24-ஆம் தேது காலை, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரிசா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளை அடையக்கூடும். Dana Cyclone: 100 கிமீ வேகம்.. தீவிர புயலாக வலுப்பெறுகிறது டானா; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
இன்றைய வானிலை (Today Weather):
21.10.2024 அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய வானிலை (Tomorrwo Weather):
22.10.2024 அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுஇகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 23.10.2024 அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update Today):
24.10.2024 முதல் 27.10.2024 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34” செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பறிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
21.10.2024 அன்று அந்தமான் கடல் பகுதிகள், மத்தியமேற்கு, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசலாம். 21.10.2024 இன்று மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்துலும் வீசக்கூடும் என்பதால் குறிப்பிட்ட நாட்களில் கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.