வானிலை: கடலூர், தஞ்சாவூர் உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. இன்றைய வானிலை அறிவிப்பு.!

தஞ்சாவூர் (Thanjavur Rains), மயிலாடுதுறை (Mayiladuthurai Rains) உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது இன்றைய வானிலை (Today Weather) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், இத்துடன் நாளைய வானிலை (Tomorrow Weather) நிலவரமும் இணைக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Rains File Pic (Photo Credit : Youtube)

செப்டம்பர் 06, நுங்கம்பாக்கம் (Chennai News): மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆறாம் தேதி இன்று வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும், வரும் செப்டம்பர் 11ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யலாம் எனவும் தெரிவித்திருந்தது. Viral Video: அணையில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை காப்பாற்றிய வாலிபர்.. வைரலாகும் வீடியோ உள்ளே..! 

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather):

அதன்படி, நேற்று முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், நாளையும் இந்த மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தலைநகர் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாக கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement