Chennai Peoples Affect Mosquitos: 6 மணிக்கு வீட்டின் கதவுகளை சாற்றும் சென்னை வாசிகள்.. ரீங்காரமிடும் கொசுக்களின் வளர்ச்சியால் மக்கள் வேதனை.!
மாலை 6 மணிக்கு மேல் வீட்டை பூட்டியே இருக்கும் சென்னை வாசிகளின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஜனவரி 24, சென்னை: வடகிழக்கு பருவமழையானது தற்போது ஓய்ந்துவிட்ட நிலையில், கடுமையான பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் இரவு நேரங்களில் கடுமையான பனி நிலவி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லையானது வழக்கத்தை விட அதிகமாக அதிகரித்துள்ளன.
காலி மனைகள் மற்றும் பராமரிப்பின்றி இருக்கும் கட்டிடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள், சென்னை மக்களை பதம்பார்த்து வருகிறது. காலி மனைகளில் பெரும்பாலும் குப்பைகள் இருப்பதால், அங்கும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. Mother Marriage: கணவரை இழந்த 45 வயது தாய்க்கு திருமணம் செய்துவைத்து அழகுபார்த்த பாசக்கார மகன்.. மகிழ்ச்சியில் புதுமண ஜோடி.!
கொசுத்தொல்லையின் காரணமாக இரவு நேரங்களில் மக்கள் வீடுகளில் உறங்க சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், மாலை நேரத்தில் வீட்டின் வாசலில் உட்கார கூட இயலாமல் தவிக்க தொடங்கியுள்ளனர்.
இதனால் கொசுபத்திகளின் விற்பனை ஒருபுறம் அதிகரித்தாலும், அவை உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் மக்கள் வாசலில் உட்காருவதை தவிர்த்து, மாலை 5.30 மணிக்கே தங்களின் வீடு கதவு, ஜன்னலை பூட்டிவிட்டு வீட்டிற்குள் இருக்கின்றனர்.
அதேபோல, முன்பு கொசுக்கள் கடித்தால் ஊர்வது போன்ற பிரச்சனை இருக்காது. ஆனால், இன்றளவில் அவை அதிகமாகவும் ஏற்படுகிறது. மாநகராட்சி சார்பில் கொசு உற்பத்தியை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அவற்றின் வளர்ச்சி இருந்துகொண்டுதான் இருக்கிறது.