வானிலை: இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் உட்பட பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 02, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பொறுத்தவரையில், கடலோர தமிழகம் மற்றும் தென்தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தேனி, தென்காசி, இராமநாதபுரம், கோவை, விழுப்புரம், திருநெல்வேலி, சென்னை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், செங்கல்பட்டு, நீலகிரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, விருதுநகர், சிவகங்கை, தர்மபுரி, அரியலூர், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் பரவலான மழை பெய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தஞ்சாவூரில் 35 டிகிரி செல்ஸியஸ் வெப்பமும், ஈரோட்டில் 17.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
இன்றைய வானிலை (Today Weather):
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 02.11.2024 இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல்,
தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Chartered Accountant: ஆதிதிராவிட மாணவர்களுக்கு சிஏ தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி மையம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
03.11.2024 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 04.11.2024 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.05 முதல் 08ம் தேதி வரை வானிலை நிலவரம் (Tamilnadu Weather Update):
05.11.2024 முதல் 07.11.2024 வரையில் தமிழகத்தல் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுஇகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.11.2024 அன்று தமிழகத்தில் ஒருஏல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25-26” டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
02.11.2024 அன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்துலும் வீசக்கூடும். 02.11.2024 அன்று தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.