Gold Rate Today: 5 நாட்களில் ரூ.2000 அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate Today) அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய தங்கத்தின் விலை ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.71,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஜூன் 27, சென்னை (Gold Price Today): ரஷ்யா-உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு (Gold Investment) செய்யும் மக்கள் என பல காரணத்தால் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை (Gold Price) இன்று சவரனுக்கு ரூ.74,000ஐ கடந்திருந்தது. வானிலை: இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

அதிரடியாக குறையும் தங்கத்தின் விலை :

சவரன் தங்கம் விலை அதன் உற்பத்தி, நுகர்வு உட்பட பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு தினமும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் பங்குச்சந்தை நிலவரத்தை பொருத்தும் தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். கடந்த வாரத்தில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், ஜூன் 27ஆம் தேதியான இன்று வெள்ளிக்கிழமை, தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்று (ஜூன் 27) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து, கிராம் தங்கம் ரூ.8,985க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமுமின்றி கிலோ வெள்ளி ரூ.1,20,000 க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கத்தின் விலையானது கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.2,000 குறைந்துள்ளது. இதனால் வரும் காலங்களில் உயருமா? அல்லது தொடர்ந்து குறையுமா? என்ற கேள்வியானது மக்கள் மனதில் எழுந்துள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement