School College Holiday: கனமழை, வெள்ளம் காரணமாக 12 மாவட்டங்களில் விடுமுறை; முழு விபரம் இதோ.!

பெஞ்சல் புயல் காரணமாக கடுமையான மழை வெளுத்து வாங்கிய நிலையில், 12 மாவட்டங்களில் மொத்தமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

School, College Holiday due to Rain (Photo Credit: @Sriramrpckanna1 X)

டிசம்பர் 01, சென்னை (Chennai News): தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு (Deep Depression) மண்டலம், பல்வேறு சூழ்நிலைகளுக்கு பின், ஃபெஞ்சல் புயலாக (Fengal Cyclone) வலுப்பெற்று, மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது. நேற்று மாலை நேரத்தில் கரையை கடக்கத் தொடங்கிய புயலின் மழை மேகனால், தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக மழையை பொழிந்து இருந்தது.

30 ஆண்டுகளில் இல்லாத மழை:

அதனைத்தொடர்ந்து, புயல் புதுச்சேரி (Puducherry Rains) கரையை நெருங்கியபின் திடீரென அங்கேயே மையம் கொண்டது. இதனால் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்து கெடிலம், தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் கனமழை-வெள்ளம் ஏற்பட்டது. புதுச்சேரியில் வரலாறு காணாத, 30 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்தது. வானிலை: "புயல் ஓய்ந்தாலும் மழை ஓயாது" - வெளுத்துக்கட்டப்போகும் கனமழை.. நாளைய வானிலை விபரம் உள்ளே.! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, திருச்‌சராப்பள்ளி, கரூர்‌, தேனி மற்றும்‌ மதுரை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை (School College Holiday) அறிவிப்பு:

இந்நிலையில், நாளை கனமழை மற்றும் வெள்ளம் போன்ற காரணத்தால் சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது அதேபோல, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement