12th Board Exam Result: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2025: ஆன்லைனில் பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2025 இன்று காலை 9 மணியளவில் வெளியாகிறது.

12th Exam Results (Photo Credit: Official Website)

மே 8, சென்னை (Chennai News): தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளியில், கடந்த மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 (12th Exam Results 2025) நடைபெற்றது. இந்த தேர்வுகளை சுமார் 8 இலட்சத்து 21 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். தேர்வுக்கு பின்னர் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது. இப்பணிகளுக்கு பின்னர் மே 9ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கிணற்றில் கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு.. உறவினர்கள் போராட்டம்..!

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025 (HSC Board Exam Results 2025):

இந்நிலையில், இன்று (மே 8) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 9 மணியளவில் பள்ளிக்கல்வித்துறையின் tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய பக்கத்தில் வெளியாகும். மாணவர்கள் தங்களின் பிறந்த தேதி மற்றும் தேர்வு பதிவு எண் ஆகியவற்றை கொடுத்து உள்நுழைந்து (Login) முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். அதே நேரத்தில், மாணவர்கள் பதிவு செய்த செல்போன் நம்பருக்கு குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். சம்பத்தப்பட்ட பள்ளிகளிலும் மாணவர்களின் மதிப்பெண்ணை பதிவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement