Tambaram Shocker: தீபாவளி தகராறு கொலையில் முடிந்த பயங்கரம்; பதிலுக்கு பதில் சரமாரி வெட்டு., பறிபோன உயிர்.!

மதுபோதையில் பட்டாசுகளை வெடித்து ஏற்பட்ட தகராறு, இறுதியில் கொலையில் முடிந்தது. 6 நாட்கள் போராடி ஒருவரின் உயிர் பிரிந்த சோகம் தாம்பரத்தில் நடந்துள்ளது.

Diwali | Death File Pic (Photo Credit: Pixabay)

நவம்பர் 06, தாம்பரம் (Chennai News): சென்னையில் உள்ள தாம்பரம் (Tambaram Murder), ஆனந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் மோசஸ். இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கல்யாணராமன். இவர் தனது வீட்டின் அருகேயே கடை வைத்து நடத்தி வருகிறார். தீபாவளியன்று இவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததாக தெரியவருகிறது. அப்போது, பட்டாசு வெடித்ததில் இருவருக்கும் இடையே தகராறு உண்டாகியுள்ளது. MK Stalin: "கம்பேக் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி" - அரசு நிகழ்ச்சியில் முதல்வர் புகழாரம்.! 

பதிலுக்கு பதில் கத்திக்குத்து:

இந்த தகராறில் ஆத்திரமடைந்த மோசஸ், வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து கல்யாண ராமனின் கழுத்தை அறுத்துள்ளார். பதிலுக்கு இரத்த வெள்ளத்தில் இருந்தபோதும், கல்யாண ராமன் தனது வீட்டில் சென்று கத்தியை எடுத்து வந்து முகத்தில் சரமாரியாக தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் இருவரும் இரத்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டனர். உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை பலனின்றி பலி:

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து லேசான காயம் அடைந்து இருந்த கல்யாணராமனை சிகிச்சைக்கு பின் கைது செய்தனர். இதில் மோசஸ் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், மேல் சிகிச்சைக்காக அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே, இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கல்யாணராமனின் மீது அதிகாரிகள் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement