வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை உட்பட பல மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Rain | Yellow & Orange Alert (Photo Credit: Pixabay)

நவம்பர் 15, நுங்கம்பாக்கம் (Chennai News): தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (Today Weather) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Bus Rammed into Bike: நெல்லை: முந்திச்செல்ல முயன்றதால் விபரீதம் - தனியார் பேருந்து மோதி கல்லூரி மாணவி நிகழ்விடத்திலேயே பலி.! 

ஆரஞ்சு எச்சரிக்கை (Orange Alert):

இந்நிலையில், இன்று காலை 10 மணிவரையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert):

அதேபோல, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதாபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மழையை தரக்கூடிய மேகங்கள் சூழ்ந்து இருப்பதால், இடி-மின்னலுடன் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement