இன்றைய வானிலை: அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை அலர்ட்.. இன்று முழுவதும் கனமழை அலர்ட்.!

செங்கல்பட்டு, வேலூர், விருதுநகர், தூத்துக்குடி உட்பட 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tamilnadu Rains (Photo Credit: @supriyasahuias X)

செப்டம்பர் 08, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், 8ம் தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது இன்றைய வானிலை (Today Weather) தெரிவித்திருந்தது. வானிலை: கடலூர், விழுப்புரம் உட்பட 8 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.! 

வானிலை நிலவரம்:

அதேபோல, நாளைய வானிலை (Tomorrow Weather) பொறுத்தவரையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தலைநகர் சென்னை வானிலை (Chennai Weather) பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரின் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம்.

காலை 10 மணிவரை மழை:

இந்நிலையில், இன்று காலை 10 மணி வரையில் செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement