வானிலை: தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுத்துக்கட்டப்போகும் கனமழை.. 36 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.!

தமிழகத்தில் மாலை 4 மணிவரை சென்னை, மதுரை, கன்னியாகுமரி உட்பட 36 மாவட்டங்களில்(Weather Today) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tamilnadu Rains (Photo Credit : @PTI_News X)

செப்டம்பர் 17, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தென்மேற்கு பருவ மழை வட தமிழக கடலோர மாவட்டங்களில் தீவிரமாக இருந்தது. வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வானிலை: இன்றும், நாளையும் 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மக்களே கவனமா இருங்க.! 

மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு 36 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், திருவாரூர் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட்டும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னையில் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை (Chennai Weather) :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement