வானிலை: கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

செங்கல்பட்டு, திருச்சி, மயிலாடுதுறை உட்பட 12 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 22, 2025) மதியம் 1 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது வானிலை நிலவரம் (Tamilnadu Weather Alert) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Tamilnadu Rain Alert (Photo Credit: @HTTweets X)

ஆகஸ்ட் 22, நுங்கம்பாக்கம் (Chennai News): மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. வானிலை: இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்..!

மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

இந்த நிலையில் தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை (Chennai Weather):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும்,குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மீனவர்களுக்காக எச்சரிக்கையை பொறுத்தமட்டில், இன்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement