ISRO GSLV F15 NVS 02: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட இஸ்ரோவின் 100 வது செயற்கைகோள்.. சீறிப்பாய்ந்த காட்சிகள்.!
விண்வெளித்துறையில் பல புதிய சாதனைகளை படைத்து வரும் இஸ்ரோ, இன்று தனது 100 வது செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது.
ஜனவரி 29, ஸ்ரீஹரிகோட்டா (Technology News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் (Sriharikota), இந்திய விண்வெளி ஆராய்ச்சி (Indian Space Research Organisation) நிறுவனமான இஸ்ரோ (ISRO) வின், சதிஷ் தவான் விண்வெளி மைய (Satish Dhawan Space Centre) ராக்கெட் ஏவுதளம் அமைந்து இருக்கிறது. இன்று காலை இஸ்ரோவின் 100 வது ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
துல்லியமான தரவுகள் கிடைக்கும்:
ஜிஎஸ்எல்வி எப்15 ரக ராக்கெட்டில், NVS 02 இந்தியாவின் விவசாயம், போக்குவரத்துக்கான நில அமைப்புகள் உட்பட பல்வேறு விஷயங்களுக்காக, துல்லியமான நிலவரைபடத்தை அமைக்க வழிகாட்டுதல் சேவை அளிக்கும் செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு இருக்கிறது.
இன்று காலை ஏவப்பட்டது:
இன்று காலை சுமார் 06:23 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. துல்லியமான வழிகாட்டுதலை பயனர்களுக்கு வழங்கும் பொருட்டு, என்விஎஸ் 03 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டு இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி NVS 02 செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.