Fridge Maintenance Tips: பிரிட்ஜ் கூலிங் ஆகவில்லையா? என்ன காரணம் தெரியுமா..? விவரம் உள்ளே..!

வீட்டின் பிரிட்ஜில் கூலிங் குறைந்து கொண்டே வருவதற்கான காரணங்கள் என்னை என்பதை குறித்து இப்பதிவில் காண்போம்.

Fridge Repair (Photo Credit: Pixabay)

மார்ச் 18, சென்னை (Technology News): கோடை வெயிலை சமாளிக்க கூலிங் தண்ணீர் குடிக்கலாம் என்று வீட்டில் உள்ள பிரிட்ஜை (Fridge) திறக்கிறீர்கள். ஆனால் ப்ரிட்ஜில் கூலிங் இல்லை. ஃப்ரிட்ஜில் ஏன் போதுமான அளவு கூலிங் இல்லை என்பதற்கான சில முக்கிய காரணங்களை இப்பதிவில் பார்ப்போம். Partial Solar Eclipse: பகுதி சூரிய கிரகணம் 2025; நாள், நேரம் குறித்த முழு விவரம் உள்ளே..!

பிரிட்ஜில் கூலிங் குறைவதற்கான காரணங்கள்:

  • பிரிட்ஜில் கூலிங் இல்லாததற்கு, பிரிட்ஜின் கதவை ஒழுங்காக மூடாமல் இருப்பதும் தான் முக்கிய காரணமாகும்.
  • பிரிட்ஜ் கதவில் இருக்கும் காஸ்கெட்டில் சிறிய வெடிப்பு அல்லது ஓட்டைகள் இருந்தால் கூலிங் தங்காது.
  • அதிகமான பொருள் வைப்பதினால் பிரிட்ஜில் கூலிங் தங்காது. எனவே, இடைவெளி விட்டு பொருட்களை வைக்க வேண்டும்.
  • பிரிட்ஜின் டெம்பரேச்சர் சரியாக இருக்க வேண்டும். ஃப்ரிட்ஜின் டெம்பரேச்சர் 4 டிகிரி செல்சியஸ் மற்றும் பிரீசர் டெம்பரேச்சர் 0 டிகிரி செல்சியஸ் அல்லது -18 டிகிரி செல்சியஸ்க்குள் இருக்க வேண்டும்.
  • பிரிட்ஜுக்கும் வீட்டின் சுவருக்கும் குறைந்தது 2 இன்ச் இடைவெளியாவது இருக்க வேண்டும்.
  • பொருட்களை வைக்கும் போது, பிளாஸ்டிக் அல்லது மூடப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவது நல்லது.
  • பிரிட்ஜ் ப்ரீசரில் ஐஸ் கட்டி படிந்து இருந்தால் அவற்றை உடனே அகற்றுவது நல்லது. ஏனெனில், அவை உங்கள் ஃப்ரிட்ஜை சீக்கிரத்தில் பழுதாக்கும் மற்றும் மின்சாரத்தை அதிகமாக இழுத்துக் கொள்ளும்.
  • பிரிட்ஜை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்ய விட்டால் நாளடைவில் ப்ரிட்ஜில் வெண்ட்களை அழுக்குகளில் தங்கிவிடும். இதனால் ப்ரிட்ஜில் கூலிங் சிக்கல் வரும்.
  • வீட்டின் தரையில் ஏற்றம் இறக்கம் இல்லாத இடத்தில் ப்ரிட்ஜை வைக்க வேண்டும். மேலும், வருடத்திற்கு ஒரு முறையாவது பிரிட்ஜை முழுமையாக சரி செய்வது நல்லது.
  • பிரிட்ஜின் கண்டென்சர் காயிலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். அதில் தூசி மற்றும் அழுக்குகள் படிந்தால், ப்ரிட்ஜில் நாளுக்கு நாள் கூலிங் குறைந்து கொண்டே வரும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement