Kerala Police s24 Ultra Zoom Action: வாகன ஓட்டிகளே உஷார்! சாம்சங் எஸ்24 அல்ட்ரா மொபைல் மூலம் விதிமீறல்களை ஜூம் செய்து கண்டுபிடிக்கும் காவல்துறை.!
கேரள காவல்துறையினர் சாம்சங் எஸ்24 அல்ட்ரா மொபைல் போனை கொண்டு விதிமீறல்களில் ஈடுப்படுவோரை அடையாளம் கண்டு தண்டனை கொடுத்து வருகின்றனர்.
ஜனவரி 02, சென்னை (Technology News): இந்தியாவில் நாளுக்குநாள் சாலை விபத்துக்கள் (Road Accident) அதிகரித்துகொண்டே போகிறது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் 2023-24 புள்ளி விவரப்படி, சுமார் 4,61,312 சாலை விபத்துகள் ஏற்பட்டன. இதில், 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் அதிக விபத்துகள் (Road Safety Awareness) நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.
சாலை விபத்துக்கள்:
இதற்கு முக்கிய காரணமாக நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும், கனரக வாகனங்கள் அதிகமாகச் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவது போன்றவை விபத்திற்கான முக்கிய காரணமாக அமைகிறது. பெரும்பான்மையான விபத்துகளுக்கு முக்கிய காரணமாக, மது அருந்தி விட்டு வாகனம் (Drunken Driving) ஓட்டுவதால் ஏற்படுகிறது. ஒவ்வொரு சாலையிலும் ஏஐ கேமரா (AI Camera)-களும், வாகனங்களின் வேகத்தை கண்டறியும் கருவிகளும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இருப்பினும் மக்கள் தவறு செய்து வருகின்றனர். Tesla Cybertruck Explosion: டிரம்ப் ஹோட்டல் வெளியே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வெடித்து சிதறிய டெஸ்லா கார்.. எலான் மஸ்க் கூறுவது என்ன?! விபரம் உள்ளே.!
சாம்சங் எஸ்24 அல்ட்ரா:
இந்த நிலையில் கேரள காவல்துறையினர் சாம்சங் எஸ்24 அல்ட்ரா (Samsung S24 Ultra) மொபைல் போனை கொண்டு அதிவேகமாக பைக்கில் சென்ற இரு இளைஞர்களை அடையாளம் கண்டு அபராதம் விதித்துள்ளனர். அவர்கள் நம்பர் பிளேட்டை மறைத்துக் கொண்டு பைக்கில் அதிவேகமாக சென்ற போதிலும், காவல்துறையினர் சாம்சங் எஸ்24 அல்ட்ரா மொபைல் போனை துரிதமாக பயன்படுத்தி அவர்களை அடையாளம் கண்டுள்ளனர். சாம்சங் நிறுவனத்தின் விலைமிக்க எஸ்24 அல்ட்ரா மொபைல் போனின் 200MP அட்டகாசமான கேமரா, 100x ஜூம் அம்சத்துடன் வெளியாகியுள்ள இந்த S23 அல்ட்ரா மூலமாக நாம் நிலாவை அருகில் பார்க்கமுடியும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த கேரள காவல்துறையினரை பின்பற்றி மற்ற காவல்துறையினரும் இவ்வாறு அதிநவீன சாதானங்களை பின்பற்றி சாலை விதிமீறல்களை தடுக்க முற்பட வேண்டும்.
சாம்சங் எஸ்24 அல்ட்ரா மொபைல் மூலம் விதிமீறல்களை ஜூம் செய்து கண்டுபிடிக்கும் காவல்துறை:
Biker tries to hide number plate, Kerala cop pulls out S24 Ultra camera
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)