போர் அபாயம்? இந்திய வீரரை சிறைபிடித்த பாகிஸ்தான்.. நடக்கப்போவது என்ன?

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தவறுதலாக எல்லை தாண்டிய எல்லை பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்து உள்ளனர்.

India Border Security Force (Photo Credit: @clashreport X)

ஏப்ரல் 24, பிரோஸ்பூர் (World News): ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் (Pahalgam Terrorist Attack) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக பாகிஸ்தானுடனான உறவை இந்தியா துண்டித்துக் கொண்டது. மேலும், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தான் அரசும், சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. Asaduddin Owaisi: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; கேள்வி எழுப்பிய அசாதுதீன் ஒவைசி..!

எல்லை தாண்டிய ராணுவ வீரர்:

இந்நிலையில், பஞ்சாபின் பிரோஸ்பூரில் சர்வதேச எல்லைப்பகுதியில் நேற்று (ஏப்ரல் 23), பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் (BSF) ஒருவர், தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்றார். இதனையடுத்து, அந்த வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்து சென்றனர். இருப்பினும், ராணுவ வீரரை பாதுகாப்புடன் அழைத்து வர பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பிஎஸ்எப் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் மீட்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரு நாடுக்களுக்கிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

போர் பதற்றம்:

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இரு நாடுகளும் தங்களது நாட்டவரை சொந்த நாட்டிற்கு அழைத்துள்ளது. இந்தியா, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. பாகிஸ்தான், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததை அடுத்து, போர் அறிவிப்பாகக் கருதுவதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பாகிஸ்தான் அரசு சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதனால், போர் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement