Actor Sri Health Status: முடிவுக்கு வந்தது நடிகர் ஸ்ரீயின் உடல்நலப்பிரச்சனை.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பலகட்ட சிக்கல் மற்றும் விவாதங்களைத்தொடர்ந்து நடிகர் ஸ்ரீ மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தொடர்பான விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18, சென்னை (Cinema News): கனா காணும் காலங்கள், பிக் பாஸ் சீசன் 1, வழக்கு எண் 18/9, வில் அம்பு, மாநகரம் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகர் ஸ்ரீ (Actor Sri) என்ற ஸ்ரீராம் நடராஜன். கடந்த 2012ம் ஆண்டு முதல் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்தவர், சமீபத்தில் என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது சில வீடியோ வெளியிட்டு வந்தார். Rajinikanth: கடவுளாக அவதரித்த நடிகர் ரஜினிகாந்த்? பூஜையுடன் தொடரும் வழிபாடு.!
சர்ச்சை வீடியோ:
இதனிடையே, சமீபத்தில் நடிகர் ஸ்ரீ வெளியிட்ட வீடியோ சர்ச்சையாகி, பின் அவருக்கு என்ன ஆனது? என்ற கேள்வி அதிகம் எழுந்தது. அப்போது, நடிகர் ஸ்ரீக்கு மனநல பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரது நண்பர்கள் ஸ்ரீயின் நிலை குறித்து கூறுகையில், "அவருக்கு பல இடங்களில் சம்பள பாக்கி இருந்தது. அவருக்கு வந்த வாய்ப்புகள் கண்முன் தட்டி பறிக்கப்பட்டன. இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி இன்று இந்நிலைக்கு சென்றுவிட்டார்" என கூறினர்.
ஸ்ரீயின் உடல்நிலை (Actor Sri Health Status Update):
இந்நிலையில், இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. ஸ்ரீயின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து ஸ்ரீயின் உடல்நிலை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், "நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவர் குறித்து தனிநபர்கள் அளிக்கும் பேட்டியை இனி ஆதரிக்க வேண்டாம். அவர் பூரண நலமுடைய உங்களின் வாழ்த்துக்களுடன் நாங்களும் எங்களின் முயற்சியை எடுக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.