VJ Vishal: மீசை, தாடியை எடுத்து, ஜிங்குனுமனி பாடலுக்கு மாஸ் காட்டிய விஜே விஷால்.. பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டாட்டம்.!

ஜிஜிகுனுமணி பாடலில் நடனமாட விஜெ விஷால் தனது மீசையை எடுத்து மாஸ் காண்பித்தார். ஆனால், அவரின் முனைப்பில் ஒரு குறையாக, உடலில் மட்டும் அங்கங்கே உரோமங்கள் தோன்றி காண்போரை கலகலப்பாக்கியது.

VJ Vishal Jingunamani Song Dance | Bigg Boss Tamil Season 8 | Day 17 (Photo Credit: @Chrissuccess / @TuhinRajesh X)

அக்டோபர் 24, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். இவர்களில் முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ் ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரத்திற்கான நாமினேஷனில் விஷால், முத்துக்குமரன், ஜாக்குலின், அருண் பிரசாத், சௌந்தரியா, தர்ஷா குப்தா, அன்ஷிகா, பவித்ரா ஜனனி, சத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Oviya Video Leak Controversy: ஓவியா அந்தரங்க வீடியோ லீக் செய்தது யார்? பயில்வான் கூறிய பரபரப்பு தகவல்.! 

விஜே விஷாலின் மாஸ் (VJ Vishal Dance) சம்பவம்:

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் பிபி ஸ்டார் ஹோட்டல் டாஸ்கில் போட்டியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆண்கள், பெண்கள் அணியில் தனித்தனி கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டு, அதனை ஏற்று பலரும் திறம்பட நடித்து வருகின்றனர். இதில் வாடிக்கையாளரிடம் இருந்து டிப்ஸ் வசூல் செய்யும் முனைப்புடன் காய்கள் நகர்த்தப்பட, விஜே விஷால் பாடல் ஒன்றுக்கு ஜாக்குலினின் உடையை எடுத்து வைத்து ஜிங்குனுமனி (Jingunamani Song) பாடலுக்கு நடனமாடி இருந்தார். அவர் ஏற்கனவே ரிஷப்சனிஸ்ட் வேலைக்காக தாடியை எடுத்திருந்த நிலையில், பெண் போல நடனமாட மீசையையும் எடுத்துவிடுவார். இதன் காட்சிகள் வைரலாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.

விஜே விஷால் பெண் வேடத்தில் அசத்திய காட்சி:

விஜே விஷாலின் அர்ப்பணிப்பு & நடனக் காட்சிகள்:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement