Actor Manoj Kumar Passes Away: ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!

பழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் இன்று காலமானார்.

Hindi Actor Manoj Kumar (Photo Credit: @bh37580 X)

ஏப்ரல் 04, மும்பை (Cinema News): ஹிந்தி சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் மனோஜ் குமார் (வயது 87). இவர், கடந்த 1937ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிறந்தார். பெரும்பாலும் இவர், நாட்டுப்பற்று மிக்க படங்களில் நடித்தும், இயக்கியும் பிரபலமானவர் ஆவார். இவரை பரத் குமார் என்றும் செல்லமாக அழைத்து வருகின்றனர். புராப் அவுர் பஸ்ஜிம், கிரான்டி, ரொட்டி, காபாடா அவுர் மாகான் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். Kesari Chapter 2 Trailer: நடிகர் அக்ஷய் குமார், ஆர் மாதவன் நடிக்கும் கேசரி அத்தியாயம் 2.. டிரைலர் ரிலீஸ்..!

நடிகர் மனோஜ் குமார் மறைவு:

கடந்த 1992ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2015இல் சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் மத்திய அரசு இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது. இதனையடுத்து, அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த மனோஜ் குமார் (Actor Manoj Kumar), வயது மூப்பு காரணமாக, பல்வேறு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இந்நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (ஏப்ரல் 04) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement