ஏப்ரல் 03, சென்னை (Cinema News): நடிகர் அக்ஷய் குமார் (Akshay Kumar), ஆர். மாதவன் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் நடிக்கும், கேசரி அத்தியாயம் 2 (Kesari Chapter 2) படத்தின் டிரைலர் இன்று (ஏப்ரல் 03) வெளியாகியுள்ளது. தேசிய அளவிலான துயரத்தின் பின்னணியில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்கொள்ளத் துணிந்த அச்சமற்ற வழக்கறிஞரான சர் சி சங்கரன் நாயராக அக்ஷய் குமார் நடிக்கிறார். Gangers Trailer: சுந்தர்.சி - வடிவேலு காம்போ.. ‘கேங்கர்ஸ்’ பட டிரெய்லர் வெளியீடு..!
கேசரி அத்தியாயம் 2 டிரைலர்:
கேசரி அத்தியாயம் 2: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் ஜாலியன் வாலாபாக் படத்தை, தர்மா புரொடக்ஷன்ஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் லியோ மீடியா கலெக்டிவ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தை கரண் சிங் தியாகி இயக்கியுள்ளார். இதில் அக்ஷய் குமார், ஆர். மாதவன் (R Madhavan) மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். கேசரி அத்தியாயம் 2 திரைப்படம், வரும் ஏப்ரல் 18ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.