Lyca Productions: பழைய பாமில் களமிறங்கும் லைகா ப்ரொடெக்சன்ஸ்.. வெளியான தகவல்.!

சரியான திட்டமிடலுடன் வெற்றிப்பாதையில் இருந்த லைகா திடீரென தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப லைகா தனது வியூகத்தை மாற்ற முயற்சித்துள்ளது.

Lyca Productions 2025 (Photo Credit: @RameshLaus X)

மே 03, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் வெளியான கத்தி, கோலமாவு கோகிலா, வடசென்னை, 2.0, தர்பார், காப்பான், பொன்னியின் செல்வன் 1 & 2, எல்2இ: எம்பூரான் உட்பட பல படங்களை தயாரித்து வழங்கிய நிறுவனம் லைகா ப்ரொடெக்சன்ஸ் (Lyca Productions). பல படங்களை மொழிமாற்றி வெளியீடும் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியாக தமிழ் குமரன் (Lyca Productions GKM Tamil Kumaran) என்பவர் பணியாற்றி வருகிறார். இதனிடையே, மேற்கூறிய படங்களை தவிர்த்து லைகா நிறுவனம் தயாரித்து வழங்கிய இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி, லால் ஸலாம், மிஷன் சேப்டர் 1, சந்திரமுகி 2, நாய் சேகர் ரிட்டன்ஸ், டான், வந்தா ராஜாவாதான் வருவேன், செக்கச்சிவந்த வானம், தியா, இப்படி வெல்லும், எமன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஹனிமூன் சென்று வந்த கையுடன் கணவர் தற்கொலை.. தம்பதியின் வாழ்க்கையில் விளையாடிய விதி.! 

உட்கட்டமைப்பை மாற்ற முடிவு:

குறிப்பாக இறுதியாக பெரிய நடிகர்களை வைத்து லைகா தயாரித்து வழங்கிய இந்தியன் 2 மிகப்பெரிய அளவில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு தோல்வி அடைந்தது. அதே நேரத்தில், பிற மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கிய லைகா எம்பூரான் படத்தில் நல்ல வசூலை சந்தித்து. இதனால் லைகா நிறுவனம் மீண்டும் தனது பழைய பாணியில் வெற்றிப்படங்களை கொடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்துக்காக ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிலம்பரசன் ஆகியோருடன் படங்கள் நடிக்க ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயல்வதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட்டிலும் கால் பாதிக்க அந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து உட்கட்டமைப்பை மாற்றி அமைக்கவும் லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement