ஹனிமூன் சென்று வந்த கையுடன் கணவர் தற்கொலை.. தம்பதியின் வாழ்க்கையில் விளையாடிய விதி.!

காதலித்து திருமணம் செய்த ஜோடியில் கணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

ஹனிமூன் சென்று வந்த கையுடன் கணவர் தற்கொலை.. தம்பதியின் வாழ்க்கையில் விளையாடிய விதி.!
Isabel Coles & Christopher Couple (Photo Credit: @CollinRugg X)

மே 03, நியூ ஜெர்சி (World News Tamil): அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியைச் சேர்ந்த பெண்மணி இஸபெல் கோல்ஸ். இவரின் கணவர் கிறிஸ்டோபர், முன்னாள் இராணுவ வீரர் ஆவார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் 2024ல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னர் புதுமணத்தம்பதி தேனிலவுக்கும் சென்று வந்தது. தேனிலவில் இருவரும் தங்களின் நேரத்தை மகிழ்ச்சியாக செலவளித்துள்ளனர். Madurai News: விஜயை பார்க்க பொய்யான காரணம்.. விடுப்பு கேட்ட காவலர் பணியிடைநீக்கம்.!

இறப்புக்கு பின் டெலிவரி செய்யப்பட்ட பூக்கள்:

இதனிடையே, வீட்டுக்கு வந்த கிறிஸ்டோபர் சற்றும் எதிர்பாராத விதமாக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்த தகவல் தெரியவில்லை. இந்நிலையில், மனைவிக்கு ஆசையாக ஆர்டர் செய்த பூக்கள், பிப்ரவரி மாதம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. டேட்டிங் செயலியில் சந்தித்து திருமணம் செய்த ஜோடியின் வாழ்க்கையில் விதி விளையாடி இறுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.

கணவருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்ட பெண், இறுதி சடங்கில் கண்கலங்கி இருக்கும் காணொளி:

(The above story first appeared on LatestLY on May 03, 2025 10:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).