Ajith Kumar & Ravichandran Ashwin: பத்ம விருதுகளை பெற்ற தமிழர்கள்.. அஜித் குமார், அஸ்வின் ரவிச்சந்திரன் அசத்தல்.!

நடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் விருதையும், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பத்ம ஸ்ரீ விருதையும் இன்று பெற்றுக்கொண்டனர்.

Ajith Kumar & Ravichandran Ashwin Padma Awards (Photo Credit: @ANI X)

ஏப்ரல் 28, புதுடெல்லி (New Delhi News): இந்திய மக்களுக்காக உயரிய சேவையை மேற்கொள்ளும் நபர்களை தேசிய அளவில் அங்கீகரித்து பாராட்டும் விதமாக மத்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த குடியரசு தினத்தில் 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. தமிழ் நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கும் விருதுகள் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. Actor Ajith Kumar: பத்ம பூஷன் விருது.. டெல்லி சென்றடைந்த நடிகர் அஜித்..! 

பத்ம ஸ்ரீ & பத்ம பூஷன்:

அதனைத்தொடர்ந்து, இன்று டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது கையினால் விருது வழங்கினார். நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

கிரிக்கெட்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் பத்ம ஸ்ரீ விருதுபெற்ற காணொளி:

நடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் விருது பெற்ற காணொளி:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement