Actor Ajith Kumar: பத்ம பூஷன் விருது.. டெல்லி சென்றடைந்த நடிகர் அஜித்..!
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது குடியரசு தலைவரால் இன்று வழங்கப்படுகிறது.
ஏப்ரல் 28, டெல்லி (Cinema News): இந்தியாவில் ஆண்டுதோறும் கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். Tourist Family Official Trailer: சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி பட ட்ரைலர்.. இடுப்பழகி டூ குடும்பத்தலைவி.. சிம்ரன் அசத்தல்..!
நடிகர் அஜீத்துக்கு பத்ம பூஷன் விருது:
அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் (Padma Bhushan 2025) விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமாருக்கு (Ajith Kumar), மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கிய கௌரவிக்க உள்ளது. இதற்கு முன்னதாக 4 நடிகர்கள் பத்மபூஷன் விருதை பெற்றுள்ளனர்.
டெல்லி சென்றடைந்த நடிகர் அஜீத்:
முதன் முதலில் 1984ஆம் ஆண்டு, நடிகர் சிவாஜி கணேசன் பத்மபூஷன் விருதை பெற்றார். 2000ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த், 2014ஆம் ஆண்டு கமலஹாசன் மற்றும் விஜயகாந்த் இறந்த பிறகு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. அதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார். இம்முறை நடிகர் அஜித்துக்கு விருது வழங்க உள்ளது. இதனால் தனது குடும்பத்துடன் அஜித் இன்று காலை டெல்லி சென்றடைந்தார். இந்த விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

