Ajith Kumar Racing: துபாய் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் வெற்றி; மனைவியிடம் அன்பை வெளிப்படுத்திய காட்சி வைரல்..!

நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி தனது கணவர் துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, அவரை ரசித்து ஷாலினி கொடுத்த ரியாக்ஷன் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tamil Actor Ajith Kumar and His Wife Shalini (Photo Credit: @Abu_officl X)

ஜனவரி 13, துபாய் (Cinema News): தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அஜித்குமார் (Actor Ajith Kumar), துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் (Dubai 24H Race) பங்கேற்றார். அஜித் குமாரின் அணியான பாஸ் கோட்டனின், ரேசிங் 991 பிரிவில் 3வது இடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் அவர் GT4 பிரிவில் ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ் அங்கீகாரத்தையும் அவர் பெற்றார். கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு அவரது மனைவி ஷாலினி, மகள் அனுஷ்கா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். Tamil Actor Ajith Kumar: விமான நிலையத்தில் மனைவியை அரவணைத்து சென்ற நடிகர் அஜித்குமார்.. வீடியோ வைரல்..!

மனைவி, மகளுடன் அன்பை வெளிப்படுத்திய அஜித்குமார்:

துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற பிறகு, மனைவி ஷாலினி மற்றும் மகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட காட்சி வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் நடிகர் மாதவன், நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் துபாய்க்கு நேரில் சென்று கார் பந்தயத்தை நேரில் கண்டுகளித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் அஜித் ரசிகர்கள் பலரும் கார் பந்தயத்தைக் காண துபாய்க்கு சென்றிருந்தனர். இந்நிலையில், நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினியை கட்டியணைத்து அவருக்கு நன்றி கூறினார். மேலும், தனது மகள் அனுஷ்காவிற்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த காட்சிகளும் வெளியாகி உள்ளது.

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement