Tamil Actor Ajith Kumar and wife Shalini (Photo Credit: @ThalaAjith_FC X)

ஜனவரி 07, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (Ajith Kumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஒரே வருடத்தில் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. ‘Good Bad Ugly’ Release Date: தல அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இட்லி கடையுடன் மோதல்.. விபரம் உள்ளே.!

குடும்பத்துடன் அஜித்குமார்:

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் சென்னை விமான நிலையத்தில் நேற்று (ஜனவரி 06) துபாய் புறப்படும்போது தனது மனைவி ஷாலினி, மகள் அனுஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரை பாசமாக அரவணைத்துவிட்டு புறப்பட்டார். அவர், கார் பந்தய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க துபாய் புறப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ இதோ: