Actor Vishnu Vishal: வா.. வா.. என் தேவதையே..! விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்து..!
தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஏப்ரல் 22, சென்னை (Cinema News): தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal), சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' மூலம் நடிகராக அறிமுகமானார். இன்று நேற்று நாளை, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக, அவரது நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியானது. கடந்த 2010ஆம் ஆண்டு, ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவருக்கு ஆரியன் என்ற மகனும் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 2018இல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஜுவாலா கட்டாவை இரண்டாவதாக விஷ்ணு விஷால் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திரிஷாவை வைத்துக்கொண்டு அப்படி ஒரு டார்க் காமெடி தேவையா? சர்ச்சையான அந்தப்பழ காமெடி..!
விஷ்ணு விஷால் வீட்டில் விசேஷம்:
இந்நிலையில், விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா (Jwala Gutta) தம்பதிக்கு இன்று பெண் குழந்தை (Baby Girl) பிறந்திருக்கிறது. இதுதொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து, "எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். ஆர்யன் அண்ணன் ஆகிவிட்டான். இன்று எங்களுக்கு 4ஆம் ஆண்டு திருமண நாள். அதே நாளில் மகள் பிறந்திருப்பது மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்தும், ஆசீர்வாதமும் தேவை" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.