திரிஷாவை வைத்துக்கொண்டு அப்படி ஒரு டார்க் காமெடி தேவையா? சர்ச்சையான அந்தப்பழ காமெடி..!
வாழைப்பழம் சாப்பிட தெரியும் என கமல் தனது பாணியில் சொன்னது இறுதியில் சர்ச்சையை சந்தித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஏப்ரல் 21, சென்னை (Cinema News): மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் கமல் ஹாசன், திரிஷா, சிலம்பரசன் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் தக் லைப். இப்படம் 5 ஜூன் 2025 அன்று திரையாகில் பல மொழிகளில் உலகத்தரத்தில் வெளியாகிறது. நாயகன் திரைப்படத்துக்கு பின்னர் நடிகர் கமல் - இயக்குனர் மணி ரத்னம் இணைந்துள்ளதால் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கி இருக்கிறது. சமீபத்தில் படக்குழு சென்னையில் தேசிய அளவிலான செய்தியாளர்களை அழைத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்த்தி இருந்தது. அப்போது, பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு படக்குழு தரப்பில் பதில் அளிக்கப்பட்டு இருந்தது. JInguchaa Lyrical Video: கமல் ஹாசனின் ஜிங்குச்சா.. தக் லைப் படத்தின் பாடல் வெளியீடு.!
கமல் - திரிஷா காமெடியில் சம்பவம்:
இந்நிலையில், கமல் கூறிய காமெடி ஒன்று சர்ச்சையாகியுள்ளது. திரிஷாவிடம் செய்தியாளர் உங்களுக்கு என்ன பிடிக்கும் என கேட்டார். இந்த கேள்விக்கு பதில் அளித்த திரிஷா, கேரளாவில் மிகப்பிரபலமாக செய்யப்படும் வாழைப்பழ குழாய் புட்டை கூறினார். அதன் பெயர் திரிஷாவுக்கு நினைவுக்கு வராத காரணத்தால், வாழைப்பழத்தை அவித்து செய்யப்படும் புட்டு பிடிக்கும் என கூறினார். அச்சமயம் குறுக்கிட்டு பேசிய நடிகர் கமல் ஹாசன், "திரிஷாவுக்கு பெயர் தெரியாது. வாழைப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும்" என கூறினார். இந்த விஷயம் சர்ச்சையை சந்தித்து இருக்கிறது. கமல் இதுவரை அரசியல் ரீதியாக அறிக்கை விடும்போதெல்லாம் புரியும் தமிழில் இந்தாளுக்கு பேசத்தெரியதா? என வினவிய கூட்டம் பலவும், இன்று திரிஷா விஷயத்தை சர்ச்சையாக்கி இருப்பதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
தக் லைப் படக்குழு செய்தியாளர்கள் சந்திப்பு:
(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 10:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

