Goundamani Wife Death: கவுண்டமணி மனைவி மரணம்.. பிரபலங்கள் கண்ணீர் இரங்கல்.. என்ன சொன்னார்கள் தெரியுமா?

கவுண்டமணியின் மனைவி சாந்திக்கு தமிழ் நடிகர்கள் விஜய், சத்யராஜ், செந்தில் மற்றும் பிற கோலிவுட் நட்சத்திரங்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Celebrities paid tribute to Goundamani's wife Shanthi (Photo Credit: YouTube)

மே 06, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் மூத்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (வயது 67), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (மே 05) மரணமடைந்தார். இவர்கள் இருவரும் 1963ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு செல்வி, சுமித்ரா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சில ஆண்டுகளாக முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி நேற்று சென்னையில் காலமானார். சாந்தியின் உடல் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி (Actor Goundamani Wife Death) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். திரையுலகினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வந்தனர். Goundamani Wife Death: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார் - சோகத்தில் குடும்பத்தினர்..!

திரை பிரபலங்கள் அஞ்சலி:

கவுண்டமணியின் மனைவி சாந்தியின் மறைவு செய்தியை அறிந்ததும், தமிழ்த் திரையுலகினர் தங்கள் இரங்கலைத் தெரிவிக்க கவுண்டமணியின் வீட்டிற்குச் செல்லத் தொடங்கினர். கவுண்டமணியின் நீண்டகால நண்பரும், அடிக்கடி இணைந்து நடித்தவருமான நடிகர் சத்யராஜ், அஞ்சலி செலுத்தவும் ஆறுதல் கூறவும் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கவுண்டமணியுடன் ஏராளமான படங்களில் உடன் நடித்து நகைச்சுவை காம்போவாக இருந்த நடிகர் செந்தில், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகரும் தவெக கட்சி தலைவரும் ஆன விஜய் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி மற்றும் பல பிரமுகர்களும் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement