Goundamani Wife Death: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார் - சோகத்தில் குடும்பத்தினர்..!
நடிகர் திரைப்பட நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி, 67 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
மே 05, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (வயது 67), உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். இவர்கள் இருவரும் 1963ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு செல்வி, சுமித்ரா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். Cooku With Comali 6: குக்கு வித் கோமாளி 6.. சிரிப்புடன் சமைக்க தயாரா?
கவுண்டமணியின் மனைவி மரணம்:
இந்நிலையில், சில ஆண்டுகளாக முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி இன்று (மே 05) சென்னையில் காலமானார். சாந்தியின் உடல் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி (Actor Goundamani Wife Death) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
67 வயதில் மரணம்:
மே 5, நடிகர் #கவுண்டமணி அவர்களின் மனைவி சாந்தி (வயது 67), உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். காதலர்களுக்கு உதவும் வேடங்களில் நடித்து பாராட்டு பெற்ற கவுண்டமணி, நிஜத்தில் காதல் திருமணம் செய்துகொண்டவர். செல்வி, சுமித்ரா ஆகிய மகள்கள் இருக்கின்றனர்.#RIPShanthiGoundamani pic.twitter.com/DOaNjhkFF9
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) May 5, 2025
(The above story first appeared on LatestLY on May 05, 2025 12:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

