Thug Life: தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருவதால், தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 16ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Thug Life (Photo Credit: @SilambarasanTR_ X)

மே 09, சென்னை (Cinema News): ராஜ்கமல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷ்னல் (Raaj Kamal Films International), மெட்ராஸ் டாக்கிஸ் (Madras Talkies), ரெட் ஜெயிண்ட் மூவிஸ் (Red Giant Movies) நிறுவனம் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இப்படத்தில் கமல் உடன் இணைந்து சிம்பு நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி திரையரங்கியில் வெளியாகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 16ஆம் தேதி நடக்கவிருந்தது. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். Govt Bans Pakistani Content on OTT Platforms: ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு.. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அதிரடி..!

கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை:

அவர் வெளியிட்ட அறிக்கையில், 'கலை காத்திருக்கலாம். தேசமே முதன்மை. நமது நாட்டின் எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலை மற்றும் தற்போதுள்ள அதிகப்படியான எச்சரிக்கை நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மே 16ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்' என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நமது தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக நமது வீரர்கள் முன் களத்தில் அசைக்க முடியாத தைரியத்துடன் நிற்கும் இந்த நேரத்தில், 'கொண்டாட்டத்திற்கான நேரமல்ல", "அமைதியான ஒருமைப்பாட்டிற்கான நேரம்" என்று நான் நம்புகிறேன். புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். குடிமக்களாகிய நாம் நிதானத்துடனும் ஒற்றுமையுடனும் பதிலளிப்பது நமது கடமை. கொண்டாட்டம் என்பது சிந்தனைக்கு வழிவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் அறிக்கை வெளியீடு:

Share Now

Tags

Today News in Tamil Today News Tamil Today News Live Tamil Breaking News Tamil News Today Breaking News Tamil Today News Now Latest Tamil News Tamil Latest News Today News Live News Tamil News Today News Live News Current Tamil News Google Tamil News Today Tamil News Live Tamil News Update Recent News Tamil Today Headlines in Tamil செய்தி இன்றைய செய்திகள் India News Today India News Tamil India Operation Sindoor Operation Sindoor News Tamil Indian Army Attack Pakistan Indian Army Attack News in Pakistan Operation Sindoor News Update in Tamil Operation Sindoor News in Tamil Tamil News Operation Sindoor India Pakistan War Indian Pakistan War News Tamil இந்தியா பாகிஸ்தான் ஆபரேஷன் சிந்தூர் Live Breaking News Headlines India Pakistan Border Ministry of Defense India Vs Pakistan India Pakistan War News Tamil Tense and Security Situation Cinema Cinema News Cinema News Tamil Silambarasan TR STR Kamal Haasan Thug Life Thug Life Update Thug Life Movie Thug Life Movie Latest Update Tamilnadu News Now Tamilnadu News Kollywood Kollywood Updates Tamil Cinema Tamil News Tamil Cinema News சினிமா தமிழ் சினிமா சினிமா செய்திகள் சிலம்பரசன் கமல் ஹாசன் மணிரத்னம் ManiRatnam Tamil Movies 2025 Upcoming Tamil Movies Upcoming Movies 2025 June 2025 Tamil Movie 2025 June Tamil Movies Thug Life Audio Launch Thug Life Audio Launch Postponed
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement