Govt Bans Pakistani Content on OTT Platforms: ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு.. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அதிரடி..!

இந்தியாவில் ஓடிடி தளங்களில் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை உடனடியாக நீக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Govt Bans Pakistani Content on OTT Platforms: ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு.. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அதிரடி..!
OTT Platforms (Photo Credit: @FilmiFever X)

மே 09, டெல்லி (Delhi News): ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அனைத்து ஓடிடி தளங்களிலும் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், பாடல்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. CA Exams Postponed: போர் பதற்றம் அதிகரிப்பு.. சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு..!

ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு:

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேசியப் பாதுகாப்பின் நலனுக்காக, இந்தியாவில் செயல்படும் அனைத்து ஓடிடி தளங்கள் (OTT), மீடியா ஸ்ட்ரீமிங் தளங்கள் பாகிஸ்தானின் வெப் சீரீஸ்கள், திரைப்படங்கள், பாடல்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் பிற ஸ்ட்ரீமிங் மீடியா உள்ளடக்கத்தை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

(The above story first appeared on LatestLY on May 09, 2025 11:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).